VETRI TECH NEWS: ஜூன் 2016
Contact Us:

If You Have Any Problem, Wanna Help, Wanna Write Guest Post, Find Any Error Or Want To Give Us Feedback, Just Feel Free To Contact Us. We Will Reply You Soon.

Name: *

Email: *

Message: *

Skillblogger

best movies

இந்த வலைப்பதிவில் தேடு

Recently Added Post

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Vetrivl277@gmail.com

ஞாயிறு, 26 ஜூன், 2016

Android சாதனத்தின் Volume Button மூலம் பல பயனுள்ள வசதிகளை பெற்றுக் கொள்ள உதவும் செயலி

Android சாதனத்தின் Volume Button மூலம் பல பயனுள்ள வசதிகளை பெற்றுக் கொள்ள உதவும் செயலி

எமது Android சாதனத்தில் தரப்பட்டுள்ள Volume button ஆனது Android சாதனத்தில் இருந்து வெளிப்படக் கூடிய ஒலியின் (சத்தம்) அளவை கூட்டிக் குறைப்பதற்காகவே தரப்பட்டுள்ளது.
எனினும் Quick Click எனும் Android சாதனத்துக்கான செயலியானது Volume Button மூலம் பல பயனுள்ள வசதிகளை பெற்றுக் கொள்ள வழிவகுக்கின்றது.

இந்த செயலியின் உதவியுடன் உங்கள் Android சாதனத்தில் இருக்கக் கூடிய Volume Button களை பயன்படுத்தி புகைப்படங்கள் எடுக்கவும், வீடியோ கோப்புக்களை பதிவு செய்யவும், Flashlight ஐ ஒளிரச் செய்யவும், குரல் பதிவுகளை மேற்கொள்ளவும், குறுஞ்செய்திகளை அனுப்பவும், அழைப்புக்களை ஏற்படுத்தவும், எந்த ஒரு செயலியையும் திறந்து கொள்ளவும் என ஏராளமான செயற்பாடுகளை செய்து கொள்ள முடியும்.

Quick Click செயலியை எவ்வாறு பயன்படுத்துவது?

இந்த செயலியை நிறுவி திறந்து கொண்ட பின் Volume Button மூலம் எவ்வாறான செயற்பாட்டை செய்ய விரும்புகிறீர்களோ அதனை தெரிவு செய்ய வேண்டும்.

உதாரணத்திற்கு நீங்கள் Volume Button மூலம் புகைப்படங்களை எடுக்க விரும்பினால் Photo என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

பின்னர் தோன்றும் அடுத்த பகுதியின் மூலம் குறிப்பிட்ட செயற்பாடு தொடர்பான மேலதிக வசதிகளை தெரிவு செய்து Ready என்பதை சுட்ட வேண்டும்.
உதாரணத்தின் படி நீங்கள் Photo என்பதை தெரிவு செய்திருந்தால், குறிப்பிட்ட புகைப்படம் பிடிக்கப்பட வேண்டிய கேமரா எது? (Back Or Front) அந்த புகைப்படத்தின் தரம் எவ்வாறு இருக்க வேண்டும்? (High, Medium, Low), புகைப்படம் பிடிக்கப்படும் போது Flash மற்றும் Auto-focus வசதி செயற்படுத்தப் பட வேண்டுமா? புகைப்படம் சேமிக்கப்பட வேண்டிய இடம் எது? புகைப்படம் பிடிக்கப்பட்ட பின் குறிப்பிட்ட புகைப்படம் திறக்கப்பட வேண்டுமா? அல்லது Gallery திறக்கப்பட வேண்டுமா? என்பவைகள் தொடர்பான அமைப்புக்களை தெரிவு செய்ய வேண்டும்.

அடுத்து தோன்றும் சாளரத்தில் Volume Button அழுத்தப்படும் முறையை தெரிவு செய்ய வேண்டும்.

உதாரணத்திற்கு அந்த சாளரத்தில் தரப்பட்டுள்ள ஒன்றன் பின் ஒன்றான கட்டங்களில் முதல் கட்டத்தில் ஒன்றை "+" ஆகவும் அதற்குக் கீழ் தரப்பட்டுள்ள இரண்டாவது கட்டத்தில் "-" என்பதையும் நீங்கள் தெரிவு செய்திருந்தால் குறிப்பிட்ட செயற்பாடானது Volume Button ஐ மேல் ஒரு முறை அழுத்தி விட்டு கீழ் ஒரு முறை அழுத்தும் போது குறிப்பிட்ட செயற்பாடு இடம் பெரும். (உதாரணத்தின் படி புகைப்படம் பிடிக்கப்படும்)

இதனடிப்படையில் வெவ்வேறு செயற்பாடுகளுக்கும் வெவ்வேறான படிமுறைகளை அமைத்துக்கொள்ளலாம்.

இறுதியாக குறிப்பிட்ட செயற்பாடு இடம்பெரும் போது Vibrate அல்லது சத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனின் அதனை தெரிவு செய்த பின் Finish என்பதை அழுத்த வேண்டும்.

அவ்வளவு தான்.

இனி நீங்கள் இட்ட கட்டளைக்கு ஏற்ப Volume Button ஐ அழுத்தும் போது குறிப்பிட்ட செயற்பாடு இடம்பெறும்.

நீங்களும் இந்த செயலியை தரவிறக்கிக் கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக

Posted By: vetrivelnews on ஞாயிறு, 26 ஜூன், 2016

மற்றவர் தொட்டவுடன் கைபேசி திரையை மூடும் புதிய மென்பொருள்! மற்றவர் தொட்டவுடன் கைபேசி திரையை மூடும் புதிய மென்பொருள்

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கைபேசி திரையை தொட்டு பயன்படுத்துவோம். அழுத்தும் வேகம், மேலே கீழே தடவுவது என இந்த செயல்கள் ஒவ்வொரு ஆளுக்கும் வேறுபடும்.
இந்த வேறுபாடுகளை வைத்து அந்தக் கைப்பேசியின் உரிமையாளர் யார் என்பதை கண்டறிந்து மற்றவர் தொட்டால் திரையை அணைத்துவிடும் புதிய மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இலியாநஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் Cheng Bo மற்றும் அவரின் நண்பர்கள் Silent Sense எனும் இந்த மென்பொருளை எழுதியுள்ளார்கள்.
இதை நிறுவியது முதல் உங்களின் விரல் அசைவு வேகம், தொடும் அழுத்தம், இழுக்கும் முறை  போன்றவற்றை உள்வாங்கி பதிந்துகொள்ளும்.
100 நபர்களிடம் நடத்திய சோதனையில் இந்த மென்பொருள் 98% அளவில் உரிமையாளரை சரியாகக் கண்டுபிடித்துவிட்டது.
பிற மென்பொருள்கள் மற்றும் விளையாட்டுகள் விளையாடும் போது இந்த மென்பொருள் வேலை செய்யாது. ஆனால் முக்கியமாக மின்னஞ்சல், குறுந்தகவல் மற்றும் புகைப்படங்களை பார்க்கும் போது இது செயல்பட்டு பிறர் பயன்படுத்தாத வண்ணம் காக்கும்.
விரைவில் Silent Sense மென்பொருள் அனைவரின் பயன்பாட்டிற்கும் வர இருக்கிறது.

Posted By: vetrivelnews on

எச்சரிக்கை: இதை செய்யாவிட்டால் உங்கள் பேஸ்புக்கில் உள்ள படங்கள் எல்லாம் அழிந்துவிடுமாம்...

இப்போது நீங்கள் பேஸ்புக்கில் உள்ளீர்களா? நன்று, இந்த செய்தி உங்களுக்கானது தான். பேஸ்புக் புதிததாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி உங்கள் பேஸ்புக்கில் உள்ள படங்களை உடனடியாக டவுன்லோட் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளது.

பேஸ்புக்கில் உள்ள டேட்டாக்கள் பாதுகாப்பானது அதனை ஏன் பேக்கப் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் உள்பட பலரும் நினைக்கலாம். இந்த புதிய அறிவிப்பு உங்களுக்கு மட்டுமல்ல, பேஸ்புக் பயன்படுத்தும் 1.65 மில்லியன் மக்களுக்கும் இது பொருந்தும்.

ஒரு நாளைக்கு பேஸ்புக்கில் லட்சக்கணக்கான போட்டோக்கள் அப்லோடு செய்யப்படுகின்றன.

பேஸ்புக் மொபைல் ஆப்பில் பல்வேறு மாற்றங்கள் குறித்து உங்களுக்கு நோட்டிபிகேசன் வந்திருக்கும்.

எனவே அதன்படி அவர்கள் உங்கள் போட்டாக்களை அழிக்கவுள்ளனர், இதற்கான மாற்றம் உங்கள் மொபைலில் இருந்து துவங்குகிறது.

பேஸ்புக் நிறுவனம் Synced போட்டாக்கள்( Synced Photos) மற்றும் வீடியோக்களை பாதுகாக்க வேண்டுமெனில் புதிதாக Moments என்ற அப்பை டவுன்லோட் செய்து ஜூலை 7ம் தேதிக்கு முன்னதாக log in செய்ய வலியுறுத்தியுள்ளது. இந்த Moments அப் வேண்டாம் என்றால், உங்கள் கணிணியில் போட்டாக்களை டவுன்லோடு செய்து கொள்ளுமாறு கூறியுள்ளது. இல்லாவிட்டால் போட்டாக்கள் மற்றும் வீடியோக்கள் அழிந்துவிடும் என்று தெரிவித்துள்ளது. Moments அப் மூலம் விரும்பியவர்களுக்கு மட்டும் தனியாக அனுப்பிக்கொள்ளும் வசதியை கொண்டுள்ளது.

sync செய்யப்பட்ட குரூப் போட்டாக்களை குறிப்பிட்ட நண்பர்களுக்கு மட்டும் அனுப்பலாம். உங்கள் நண்பர்கள் உங்களுக்கு அனுப்பும் போட்டாக்களை நீங்கள் மட்டுமே காண முடியும். Moments வைத்துள்ளவர்கள் மட்டுமே உங்கள் போட்டாக்களை காண முடியும். இது போன்ற வசதிகள் பேஸ்புக்கின் புதிய Moments அப்பில் உள்ளது.

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்

இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology

Posted By: vetrivelnews on

ரூ.93 க்கு 10GB 4G டேட்டா வழங்கும் ரிலையனஸ் கம்யூனிகேஷன்

இந்தியாவின் ரிலையனஸ் நிறுவனம் ரூ.93 க்கு 10GB 4G  டேட்டா இன்ட்ர்நெட் சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. ரிலையன்ஸ் சிடிஎம்ஏ சந்தாதாரர்களுக்கு இந்த சிறப்பு சலுகையை ஆர்காம் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையுடன் இணைந்து ஆர்காம் சிடிஎம்ஏ வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட புதிய சிடிஎம்ஏ மொபைல்கள் வாயிலாக வழங்க உள்ளதாக டிராய் அமைப்புக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

முதற்கட்டமாக ஜூலை மாத தொடக்கம் முதல் டெல்லி  ,  மும்பை , கோல்கத்தா , குஜராத் ,ஆந்திர பிரதேசம் ,மஹாராஷ்ட்டிரா ,உத்திர பிரதேசம் கிழக்கு மற்றும் மேற்கு , பஞ்சாப் , ஒடிசா , மத்திய பிரதேசம் மற்றும் பிகார் ஆகிய 12 தொலைதொடர்பு வட்டங்களுக்கு தொடங்கப்பட உள்ளது.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு , கேரளா , கர்நாடாகா மற்றும் ராஜஸ்தான் போன்ற தொலைதொடர்பு வட்டங்களுக்கு ஜூலை மத்தியில் தொடங்க திட்டம்மிட்டுள்ளதாக தொலை தொடர்பு துறைக்கு ஆர்காம் டிதம் அனுப்பியுள்ளது. அனுமதி கிடைத்த உடன் விரைவில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.
ரூ.93 முதல் ரூ.97 வரையிலான விலையில் வட்டங்களை பொருத்து கட்டணம் விகிதம் மாறினாலும் பழைய சிடிஎம்ஏ மொபைல்களை புதிய 4ஜி வசதியை பெறும் வகையில் மேம்படுத்தும் நோக்கில் இந்த சேவையை வழங்க திட்டமிட்டுள்ளதாக பிடிஐ செய்தி குறிப்பில் ஆர்காம் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மற்ற போட்டியார்கள் வழங்ககூடிய 4ஜி அலைவரிசை டேட்டா கட்டணத்தை விட 94 சதவீதம் குறைவான விலையில் இந்த சேவையை ஆர்காம் தொடங்க உள்ளது.

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்

இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology

Posted By: vetrivelnews on

சனி, 11 ஜூன், 2016

வாட்ஸ்அப் மெசெஞ்சரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு பயனுள்ள வசதி!

வாட்ஸ்அப் மெசெஞ்சரில் மறுமொழி (Reply) கூறுவதற்கு புதியதொரு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதியானது வாட்ஸ்அப் மெசெஞ்சர் மூலம் அடிக்கடி அரட்டைகளை மேற்கொள்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

தனி ஒரு நபருடன் அரட்டையில் ஈடுபடும்போது அவர் முன்பு கேட்ட ஒரு கேள்விக்கு விடையளிக்க இந்த மறுமொழி பட்டனை பயன்படுத்தலாம்.

மேலும் குழு அரட்டையின் போது ஒருவரது கருத்துக்கு மறுமொழி தெரிவிக்கவும் இந்த வசதி மிகவும் பயன்படுகிறது.

இந்த பதிப்பு இதுவரை கூகுள் ப்ளே ஸ்டோரில் மேம்படுத்தப்படவில்லை எனினும் கீலே வளங்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் APK கோப்பை தரவிறக்கி உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் நிறுவுவதன் மூலம் வாட்ஸ்அப் மெசெஞ்சரை புதிய பதிப்பிற்கு மேம்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் தனி நபர் அரட்டையின் போது நீங்கள் தெரிவிக்கும் மறுமொழியை பெற்றுக்கொண்டவர் படித்துவிட்டாரா? என்பதை அறிந்து கொள்ள முடிவதுடன் குழு அரட்டையின் போது நீங்கள் தெரிவித்த மறு மொழியை யார் யார் படித்துள்ளார்கள் என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.

வாட்ஸ்அப் மூலம் ஒருவருக்கு மறுமொழி தெரிவிப்பது எப்படி?

முதலில் பதிவில் வழங்கியுள்ள இணைப்பு மூலம் வாட்ஸ்அப் மெசெஞ்சரை புதிய பதிப்பிற்கு மேம்படுத்திக்கொள்க.

பின்னர் மறுமொழி தெரிவிக்க வேண்டிய செய்தியை தொடர்ச்சியாக அலுத்துக.

இனி மறு மொழி தெரிவிப்பதற்கான ஒரு அம்புக்குறி அடையாளம் வாட்ஸ்அப் செயலியின் இடது மேல் பகுதியில் தோன்றும். பின் அதனை சுட்டுவதன் மூலம் அந்த செய்திக்கு மறுமொழி தெரிவிக்கலாம்.

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்

இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology

Posted By: vetrivelnews on சனி, 11 ஜூன், 2016

காகிதத்தில் எழுதப்பட்டிருக்கும் ஒன்றை டிஜிட்டல் வடிவில் பீ.டீ.எப் ஆக​ மாற்றுவது எப்படி?

நம் வேலையை இலகுவாக்கும் பல ஆன்ராயிடு செயலிகளை பற்றி எமது தளத்தில் எழுதி உள்ளோம். இன்றும் அதே போல் ஒரு பயனுள்ள செயலியை உங்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று நினைக்கின்றேன். இது முக்கியமாக மாணவர்களுக்கு மிக பயனுள்ள ஒரு செயலியாக அமையும். மேலும் அவர்களின் நேரத்தையும் சேமித்து வேலையையும் இலகுவாக்கி கொள்ள முடியும்.

சில சந்தர்ப்பங்களில் காகிதத்தில் இருக்கும் ஒன்றை எம்மிடம் யாராவது டைப் செய்து கேட்பார்கள், இல்லாவிட்டால் எமக்கே ஒரு தேவை ஏற்படும். அதே போல மாணவர்களும் பல குறிப்புக்களை பார்த்து எழுதும் சந்தர்ப்பங்கள் ஏற்படும். அவ்வாரான சந்தர்ப்பத்தில் இனிமேல் ஒவ்வொரு எழுத்தாக பார்த்து எழுதிக்கொண்டிருக்க​ வேண்டிய தேவையில்லை. உங்களது ஸ்மார்ட் போன் கேமரா மூலமாகவே ஸ்கேன் செய்து அதை டெக்ஸ்ட் ஆக​ மாற்றிக்கொள்ள முடியும்.

இந்த செயலி பற்றி பார்க்க முன்னர் எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்ட பதிவான "ஆன்ராயிடு போனுக்கான மிகச்சிறந்த பீ.டீ.எப் மேனஜேர்" என்ற பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வளங்கபட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும். இந்த செயலி மூலம் வேண்டிய ஒரு தரவை மிக இலகுவாக பீ.டீ.எப் கோப்பாக மாற்றிக்கொள்ள முடியும்.

ஆகவே இதே போன்று எமது போன் கேமராவை பயன்படுத்தி காகிதத்தில் உள்ள எழுத்துக்களை எமது ஆன்ராயிடு அல்லது ஆப்பிள் சாதனத்தில் டெக்ஸ்ட் வடிவில் பெறலாம். இதை எவ்வாறு செயல்படுத்துவது என்று பார்ப்போம்.

காகிதத்தில் எழுதப்பட்டிருக்கும் ஒன்றை பீ.டீ.எப் ஆக​ மாற்றுவது எப்படி?

முதலாவதாக கீலே தறப்பட்டிருக்கும் ஆன்ராயிடு/  ஐபோன் பீ.டீ.எப் உருவாக்கும் செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து உங்களைகுக்கு தேவையான எழுத்துக்களை கொண்ட காகிதத்தை படம் பிடியுங்கள்.

அடுத்து அந்த​ போட்டோவை தேவையான அளவிற்கு க்ரொப் செய்து கொண்டு Next Step என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்யுங்கள்.

அவ்வளவு தான்..! இப்போது காகிதத்தில் இருந்த எழுத்துக்கள் டிஜிட்டல் வடிவில் பீ.டீ.எப் ஆக மாற்றப்பட்டு விட்டது. அடுத்து வரும் திரையில் இந்த புதிய கோப்பை போனில் சேமித்து கொள்வதற்கான வசதி காட்டப்பட்டும்.

ஆகவே மிக இலகுவாக காகிதத்தில் இருக்கும் எழுத்துக்களை டிஜிட்டல் வடிவில் பீ.டீ.எப் ஆக மாற்ற உதவும் ஆன்ராயிடு மற்றும் ஐ போன் செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் 

இந்த பயனுள்ள செயலியின் ஆன்ராயிடு போனுக்கான விளம்பரங்கள் நீக்கப்பட்ட பதிப்பை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களது போனுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்

இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology

Posted By: vetrivelnews on

வெள்ளி, 10 ஜூன், 2016

உங்களுக்குத் தேவையான எந்த ஒன்றையும் இந்த கீபோர்ட் மூலமே தேடிப்பெறலாம்

அண்மையில் ஜிபோர்டு எனும் ஒரு கீபோர்டு செயலியை கூகுள் நிறுவனம் ஐபோன் சாதனங்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தது.
குறிப்பிட்ட கீபோர்டு செயலி மூலம் அருகில் இருக்கக்கூடிய உணவகங்கள், வீடியோ கோப்புக்கள், புகைப்படங்கள், அனிமேஷன் படங்கள், காலநிலை தகவல்கள், செய்திகள், ஸ்கோர் விபரங்கள், இமொஜிகள் உட்பட எந்த ஒன்றையும் கீபோர்டு செயலி மூலமே தேடிப்பெறவும் அவற்றை நண்பர்களுடன் பகிரவும் முடிந்தது.

என்றாலும் இதனை ஆரம்பகட்டமாக ஐபோன் சாதனங்களுக்கு மாத்திரமே வெளியிட்டிருந்தது (ஆண்ட்ராய்டு செயலி விரைவில் வெளியிடப்படும்)

இருப்பினும் மேற்குறிப்பிட்ட பல வசதிகளை ஸ்லேஷ் எனும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுக்கான கீபோர்ட் செயலி மூலமும் பெற்றுக்கொள்ள முடியும். இதனை கீலுள்ள இனைப்பு மூலம் தரவிரக்கிக் கொள்ளலாம்.

இந்த கீபோர்ட் செயலியின் கீழ் பகுதியில் வழங்கப்பட்டுள்ள ஸ்லேஷ் (/) குறியீட்டை சுட்டிய பின்னர் பொருத்தமான குறிச்சொற்களை உள்ளிடுவதன் ஊடாக வெவ்வேறு அம்சங்களை தேடிப்பெறவும் அவற்றை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் முடியும்.

உதாரணத்திற்கு இந்த கீபோர்டு செயலி மூலம் அனிமேஷன் படங்களை தேடிப்பெற விரும்பினால்  ஸ்லேஷ் (/) குறியீட்டுடன் Giphy என தட்டச்சு செய்ய வேண்டும் பின்னர் உங்களுக்குத் தேவையான அனிமேஷன் படங்களை குறிப்பிட்ட கீபோர்டு செயலி மூலமே நேரடியாக தேடிப்பெறலாம்.

அதேபோல் கூகுள் தேடல் ஒன்றை மேற்கொள்ள Google எனவும் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள புகைப்படங்களை தேடிப்பெற Photos எனவும் இடங்களை குறிப்பிட்டுக் காட்ட Maps எனவும் யூடியூப் வீடியோ கோப்புக்களை தேடிப்பெற YouTube எனவும் வெவ்வேறு குறிச்சொற்களை உள்ளிடலாம்.

இன்று பொதுவாக அனைவராலும் பயன்படுத்தப்பட்டுவரும் பேஸ்புக் மெசெஞ்சர், வாட்ஸ்அப், வைபர், டெலிகிராம் போன்ற மெசெஞ்சர் சேவைகளை பயன்படுத்தும் போது இந்த கீபோர்ட் செயலியானது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையலாம். அண்மையில் வைபர் சேவையில் அனிமேஷன் படங்களை பகிர்வதற்கான வசதி வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

எனவே ஒரு புதிய அனுபவத்தை வழங்கக்கூடிய இந்த செயலியை நீங்களும் பயன்படுத்திதான் பாருங்களேன்.

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்

இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology

Posted By: vetrivelnews on வெள்ளி, 10 ஜூன், 2016

மற்றவர்கள் உங்களது ஆன்ராயிடு போனை பயன்படுத்தும் போது ஆன்ராயிடு விருந்தினர் முறையை செயற்படுத்துவது எப்படி?

ஆன்ராயிடு டிவைஸ்-களில் தன் பயனர்களுக்கு பயனுள்ள வகையில் பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதனால் தான் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்கள்  உலகில் அதிகளவோரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் இதில் சிறப்பு செயலிகளின் ஆதரவோடு பல விடயங்களை இலகுவாக செய்து கொள்ள முடிகின்றது.

ஆகவே இன்றைய பதிவிலும் மற்றுமொரு பயனுள்ள ஆன்ராயிடு செயலி ஒன்றை பற்றி பாப்போம்.

நாம் பாவிக்கும் போனை எம்மை தவிர பலர் பாவிக்கும் சந்தர்ப்பங்கள் உண்டு. நம் நண்பர்கள் அல்லது வேறு சிலர் எமது போனை பாவிக்கும் போது எமது தனிப்பட்ட விடயங்களை பார்க்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படும்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் எமது தனியுரிமையை பாதுகாக்க எம்மை தவிர மற்றவர்கள் நமது போனை பாவிக்கும் போது விருந்தினர் முறையை செயற்படுத்தி போனை அவர்க்ளுக்கு கொடுத்தால் எமது போனில் இருக்கும் தனிப்பட்ட விடயங்கள் பாதுகாக்கப்படும்.

இது எவ்வாறு செயற்படுகிறது என்றால், விருந்தினர் முறையை எமது போனில் செயட்படுத்துவதால் குறுப்பிட்ட சில ஆப்ஷன்களை மாத்திரமே போனில் செயட்படுத்தக்கூடியதாய் இருக்கும். இதனால் எமது தனிப்பட்ட விடயங்கள் பாதுகாக்கப்படுவதோடு போனில் இருக்கும் செயலிகள் மற்றும் முக்கியமான ஆப்ஷன்களை குறிப்பிட்ட நபர் பார்க்காமல் தடுக்கவும் முடியும்.

ஆன்ராயிடு போனில் விருந்தினர் முறையை செயற்படுத்தி எமது தனிப்பட்ட விடயங்களை மற்றவர்களிடம் இருந்து மறைப்பது எப்படி என்று விளக்கமாக பார்ப்போம்.

ஆன்ராயிடு போனில் விருந்தினர் முறையை செயற்படுத்துவது எப்படி?

முதலாவதாக கீலே தறப்பட்டிருக்கும் விருந்தினர் முறை ஆன்ராயிடு செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை போனில் ஆரம்பித்து (+) குறியீட்டை கிளிக் செய்யுங்கள்

அதில் உங்களது போனை பயன்படுத்தும் நபர் பார்த்தால் பரவாயில்லை என்று இருக்கும் செயலிகளை உங்கள் செயலி பட்டியலிள் இருந்து தெறிவு செய்யுங்கள். தெறிவு செய்த பின் 'அப்ளை' என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது நீங்கள் அனுமதித்த செயலிகள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு காட்டப்படும். அடுத்து அந்த ஸ்கிரீனில் வலது கீழ் மூலையில் உள்ள அம்புக்குறியை கிளிக் செய்யுங்கள்.

இப்போது உங்களுக்கு ஓர் கடவுச்சொல் கிடைக்கும், அதை நினைவில் வைத்துக்கொண்டு, இந்த விருந்தினர் முறை செயல்பட வேண்டிய நேர அளவொன்றை தெறிவு செய்து ஸ்டார்ட்-ஐ கிளிக் செய்யுங்கள்.

அவ்வளவு தான்.. இப்போது உங்களது போனில் விருந்தினர் முறை ஆறம்பிக்கப்பட்டு விட்டது. ஆகவே போனை பயன்படுத்துபவர் குறிப்பிட்ட வசதிகளை மட்டுமே உங்களது போனில் பார்க்க முடியும்.

ஆகவே உங்களது ஆன்ராயிடு போனில் இருக்கும் தனிப்பட்ட விடயங்களை குறிப்பிட்ட நேரத்திற்கு பாதுகாக்க உதவும் இந்த 'விருந்தினர் முறை' செயலியை                                  இங்கே கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

ஆன்ராயிடு விருந்தினர் முறையை இடையில் நிறுத்த வேண்டும் என்றால், நொடிபிகேஷன் பெனலில் Guest Mode என்று இருப்பதை கிளிக் செய்து மேலே தரப்பட்ட குறிப்பிட்ட கடவுச்சொல்லை டைப் செய்து நிறுத்திக்கொள்ளலாம்.

மேலும் இது போன்ற புதிய புதிய தகவல்களை உடனுக்குடன் அறிய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்

இத பதிவு நல்ல இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொளுங்கள்.
ஒரு வலைத்தளம் இயங்குவதுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய கருத்துக்கள் தயவு செய்து உங்களுடைய கருத்துக்கள் இருதால் கமெண்ட்ஸ் பண்ணுங்கள்
Share செய்ய மறந்துவிடதீர்கள்.. நீங்கள் ஷேர் செய்வதால் கண்டிப்பா ஒருவருக்காவது உதவியாக இருக்கும்
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
.
…☆ Like  Comment  Share Tag ☆ …
.
==================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
★★★ Keep Clam And Hack More ★★★
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
└.☆ Like : VETRIVL TECH News  Way to learn New Technology

Posted By: vetrivelnews on

Contact Us

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

vetrivlnews

Latest post

Vetri Vel . Blogger இயக்குவது.

வலைப்பதிவு காப்பகம்

Add

vetrivl

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Blogger Pages

About Us

Recent Comment

லேபிள்கள்

Copyright © . vetri vel . All Rights Reserved.
Designed by :-vetri tech news vl